டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா
பொள்ளாச்சி, ஜன.15
ஆனைமலை
புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் அமைந்துள்ளது உலாந்தி
வனச்சரகம். உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் - கோழிகமுத்தியில் யானைகள்
வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு கலீம், மாரியப்பன் உட்பட 32 வளர்ப்பு
யானைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டாப்சிலிப்பில் யானை கொண்டாடப்படும். வழக்கமாக கோழிகமுத்தியில் இருந்து யானைகள் டாப்சிலிப் கொண்டுவரப்பட்டு யானைப்பொங்கல் விழா நடத்தப்படும். யானைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யானைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கரோனா தொற்று
காரணமாகவும், டாப்சிலிப்பில் அதிக மழைப்பொழிவின் காரணமாகவும் கோழிகமுத்தி
யானைகள் வளர்ப்பு முகாமிலேயே யானைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில்,
மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையால் பொங்கல் வைக்கப்பட்டு யானைகளுக்கு
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யானை பொங்கல் நிகழ்ச்சிக்காக யானைகள் அருகில்
உள்ள ஓடையில் குளிப்பாட்டப்பட்டு திருநீர், மஞ்சள், திலகமட்டு, மலர்மாலை
அணிவிக்கப்பட்டு இருந்தன.
ப ொங்கலுடன் சேர்த்து யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, பழம், வெல்லம், சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. சுற்றுலாப் பயணி



No comments