Breaking News

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பு

 


நிலக்கடலை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பொள்ளாச்சி. டிச. 20.ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த நிலக்கடலை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி பயிற்சி மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இதற்கு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணிதா தலைமை வகித்தார். 

நிலக்கடலை சாகுபடி குறித்து தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணிதா பேசியதாவது...

 பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயிராக உள்ளது. மேலும் மற்ற பயிர்களை காட்டிலும் அதிக மகசூல் தரக்கூடிய குறுகியகால எண்ணெய் வித்துப் பயிராக நிலக்கடலை உள்ளது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நிலக்கடலை மூலம் எண்ணை, உணவுப் பொருளான கடலை மிட்டாய் மற்றும் பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி அதிக லாபம் பெறலாம் என்றார்.

 அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிலக்கடலை ரகங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் பேசினார். உர மேலாண்மை குறித்து பேராசிரியர் சீதாலட்சுமியும், நுண்ணுயிர்களின் முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் மீனாவும் பேசினார்கள்.
 மேலும் விவசாயிகளுக்கு மண்புழு உரம், உயிர் உரங்கள் எதிர்ப்பு பூஞ்சான் கொல்லி உரம், நிலக்கடலை அதிக மகசூல் பெறுவதற்கு ஏற்ற பொருட்கள் அடங்கிய இடுபொருட்கள் வழங்கப்பட்டன. 60 விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனா, ஊராட்சித் தலைவர் நாகேந்திரன் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் வேளாண் கண்காணிப்பாளர் சரவணகுமார் செய்திருந்தார்.

No comments