Breaking News

இன்றும் என்றும் தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் - சட்டப்பேரவை துணைத்தலைவர் பேச்சு

 



பொள்ளாச்சி. டிச. 11.தமிழகத்தில் இன்றும் என்றும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். 

பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட, பொள்ளாச்சி நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், தம்பு, அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, குருசாமி, ரகுபதி, வீராசாமி, நீலகண்டன், அருணாச்சலம், கனகு, அருள் உட்பட பலர் பங்கேற்றனர். சட்ட பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது....

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

 மக்கள் நலத் திட்டங்களால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிக்கலான பிரசவத்திற்கான தனி மருத்துவமனை ரூ
. 40 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அதே போல் 9 மாடியில் பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகரத்தில் ரூ .34 கோடியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 75 கோடியில் கிராமங்களுக்கு என புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் அனைத்து கிராம பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சென்று சேரும்.

 இப்படி அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களால் இன்றும், என்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும்.
 மீண்டும் அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும். கருணாநிதி குடும்பம் கைகளுக்கு ஆட்சி சென்றுவிட்டால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழக மக்களின் தலையெழுத்தே மாறிவிடும். ஆகவே மீண்டும் முதல்வர் எடப்பாடி தலைமையில் நல்லாட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட பணியாற்ற வேண்டும் என்றார்.

No comments