பொள்ளாச்சி அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சாவு
பொள்ளாச்சி அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சாவு
பொள்ளாச்சி, டிச.16
பொள்ளாச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
பொள்ளாச்சி அடுத்த நஞ்சேகவுண்டன்புதூரைச்சேர்ந்தவர் அண்ணாமலை(34), இவரது நண்பர்கள் நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(40), மற்றும் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த முருகானந்தம்.
மூவரும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்துள்ளனர். புதன்கிழமையன்று மூவரும் உடுமலையில் கார் வாங்குவதற்காக பொள்ளாச்சியில் இருந்து காரில் சென்றுள்ளனர். காரை அண்ணாமலை ஓட்டிச்சென்றுள்ளார். பொள்ளாச்சி-உடுமலை சாலையில் கார் கெடிமேடு அருகே சென்றபோது, மதுரையில் இருந்து எதிர்ப்புறத்தில் வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் அண்ணாமலை சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த விஜயகுமார், முருகானந்தம் ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டுசெல்லப்பட்டனர். இதில் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த முருகானந்தம் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனை சிகிச்சைகாக கொண்டுசெல்லப்பட்டார்.
மதுரையில் இருந்து வந்து விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்த சதீஷ் மற்றும் அவரது மனைவி சண்முகப்பிரியா காரில் ஏர் பேக் வெளியானதால் சிறிய காயங்களுடன் தப்பினர். கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.




No comments