Breaking News

ஆழியாறு அணை பூங்கா 9 மாதங்களுக்கு பிறகு திறப்பு

 

ஆழியாறு அணை பூங்கா 9 மாதங்களுக்கு பிறகு திறப்பு



பொள்ளாச்சி. டிச. 14. பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்கா ஒன்பது மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
 கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது ஆழியாறு அணை. இந்த அணைக்கு உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
 மேலும் ஆழியாறு அணையில் படகு சவாரி செய்வதை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.
 இதனால் ஆழியாரில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆழியாறு அணை பூங்கா மூடப்பட்டது. படகு சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆழியாறு அணை பூங்காவை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு திறந்து வைத்தார். உடன் அதிமுக ஒன்றியச்செயலாளர்கள் கார்த்திக்அப்புச்சாமி, சுந்தரம், பரம்பிக்குளம் செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, உதவிப்பொறியாளர்கள் மாணிக்கவேல் உட்பட பலர் இருந்தனர்.

----

No comments