Breaking News

ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

 

ரயில் நிலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

பொள்ளாச்சி, டிச.18
 வேளாண் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
 மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
 இந்நிலையில், பொள்ளாச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாலை நடைபெற்றது. பொள்ளாச்சியில் ரயில் நிலையம் முன்பு கூடியவர்கள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும்,விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர். பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீசா, நிர்வாகிகள் சுல்தான்அமீர், எம்.எச்.அப்பாஸ், டி.எம்.எஸ் அப்பாஸ், பதுருதீன், , சிங்கை சுலைமான், முஸ்தபா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆனைமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உடன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.  ஆனைமலை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கம்பர்,  நிர்வாகிகள் துறைவளவன், சந்திரசேகரன், நித்திலவழுதி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments