ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி
தமிழக முன்னாள் ஜெயலலிதா அவர்களின் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில்
டி. நல்லிக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புரட்சி தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான *செ.தாமோதரன்* அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு *அம்மா* அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர். ஏ. சக்திவேல், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பி. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர்கள் ஆச்சிபட்டி பழனிச்சாமி, குழந்தைவேல் , ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திக், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் ஆச்சிபட்டி பாலகிருஷ்ணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ரமேஷ்குமார், தினேஷ், அருண் பிரசாத், டி.நல்லிக்கவுண்டன் பாளையம் கிளைக் கழக நிர்வாகிகள் தம்பி(எ) முத்துசாமி, தவச்செல்வக்குமாரன் , சக்திவேல், தளபதி, ஹரி, பழனிச்சாமி, செந்தில் குமார், ராமன், ரங்கன் , வேலாயுதம்பாளையம் சக்தி சண்முகம், சுகுமார் ,ஆறுச்சாமி, உளபட பலர் கலந்து கொண்டனர்...

No comments