Breaking News

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

 


பொள்ளாச்சி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோத்தகிரியை சேர்ந்தவர் தர்மராஜ்(27) இவரது மனைவி ரம்யா(25).இவர்களுக்கு இரண்டு வயதில் மகன், மூன்று வயதில் மகள் உள்ளனர். இருவரும் மெட்டுவாவியிலுள்ள தோட்டத்தில் தங்கி விவசாய வேலை செய்து வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ரம்யாவுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்தத் துக்கம் தாளாமல் தர்மராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இருவரது உடலை மீட்டு நெகமம்  போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் இருவரும் தவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments