Breaking News

பொள்ளாச்சியில் திமுகவினர் இருவர் அதிரடி கைது - பொள்ளாச்சி ஜெயராமன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகார்

பொள்ளாச்சியில் திமுகவினர் இருவர் அதிரடி கைது

பொள்ளாச்சி ஜெயராமன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகார்



பொள்ளாச்சி, ஜன.16
 
 சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் தகவல் பரப்பியதாக கூறி பொள்ளாச்சியை சேர்ந்த திமுகவினர் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை தேர்தல் வந்தால் பெரிதாகிவருகிறது. இந்நிலையில், அதிமுக வைச்சேர்ந்த கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் சதீஷ்குமார் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் சனிக்கிழமை திமுகவினர் இருவர் மீது புகார் தெரிவித்துள்ளார். 

 

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பெயருக்கு களங்கம்  ஏற்படுத்தும் வகையில் சம்பந்தம் இல்லாத ஒரு பெண்ணோடு, ஒரு ஆண் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அந்த புகைப்படம் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என தட்டச்சு செய்யப்பட்ட புகைப்படங்கள் முகநூலில் போடப்பட்டிருப்பதாகவும், 
 
சட்டப்பேரவை துணைத்தலைவரின் புகைப்படத்தையும் அவமதிக்கும் வகையில் வாசகங்களை தட்டச்சு செய்து  திமுக பொள்ளாச்சி நகர முரசொலி மன்ற துணைச்செயலாளர் நாகராஜ் மற்றும் திமுக உறுப்பினர் பொள்ளாச்சியை சேர்ந்த சுதர்ஷன் ஆகியோர் வெளியிட்டதாகவும், 15ம் தேதி இரவு பொள்ளாச்சி பேருந்துநிலையம் அருகே  திமுகவை சேர்ந்த இருவர் நின்றிருந்தபோது, சதீஷ்குமார் இருவரிடமும் ஏன் ஆதாரமில்லாமல் இதுபோன்ற வெளியிடுகிறீர்கள் என கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தகாகவும் புகார் தெரிவித்துள்ளார். 
 
புகாரையடுத்து, விசாரணை நடத்திய பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் திமுகவை சேர்ந்த நாகராஜ், சுதர்ஷன் ஆகியோரை கைது செய்தனர்.

No comments