Breaking News

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மின்கசிவு

 


 பொள்ளாச்சி. டிச.7
பொள்ளாச்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி நோயாளிகளாக தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர உள்நோயாளிகளாக நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை எலக்ட்ரிக் பேனல் போர்டில் தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியுளளது.
நோயாளிகள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கு சென்றவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அங்கு உள்ள தீயணைப்பான் வைத்து தீ பற்றுவதற்குள் மின் கசிவை சரி செய்து விட்டனர். பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மின் கசிவுடன் தீப்பற்றும் அதற்குள் ஊழியர்களே அதை கட்டுப்படுத்தி விட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
 இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments