Breaking News

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது

 

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

பொள்ளாச்சி, டிச.13
 15 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை பொள்ளாச்சி மேற்கு போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
 புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனியமுத்து(24), இவர் திருப்பூர் அடுத்த அவிநாசி பகுதியில் தங்கி பவர்லூம் பழுதுபார்க்கும் தொழில் செய்துவந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் மாணவியை கொண்டு அவரது பெற்றோர்கள் விட்டுச்செல்கின்றனர். இந்நிலையில்,மீண்டும் முனிய முத்து பொள்ளாச்சி வந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து,பொள்ளாச்சி மேற்கு போலீஸில் மாணவியின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முனியமுத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 

No comments