9 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர் வீழ்ச்சி திறப்பு
9 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சி திறப்பு
பொள்ளாச்சி, டிச.13
ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சி 9 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்துசெல்வார்கள். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் குரங்குநீர்வீழ்ச்சி மூடப்பட்டது. இதனால், ஆழியாறு வரும் சுற்றுலாப்பயணிகள் குரங்குநீர்வீழ்ச்சியில் குளிக்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். குரங்குநீர்வீழ்ச்சியை திறக்கக்கோரி சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை குரங்குநீர்வீழ்ச்சி திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதும், சமூக இடைவெளியை கடைபிடித்து, குறைந்து அளவு சுற்றுலாப்பயணிகளே குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments