கரடி தாக்கியவருக்கு சிகிச்சை
கரடி தாக்கியவருக்கு சிகிச்சை பொள்ளாச்சி. நவ.13
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய 6 வரச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.இந்த வனப்பகுதிகளில் யானை புலி சிறுத்தை கரடி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. வன உயிரின எதிர்கொள்ளல் அவ்வப்போது இந்த வனப்பகுதிகளில் நடந்து வரும் நிலையில், இன்று காலை மானாம்பள்ளி வனச்சரக சோலையார் சேடல்டேம் பகுதியில் சென்றுகொண்டிருந்த ராசு என்பவரை கரடி தாக்கி உள்ளது. கரடி தாக்கியவரை மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனைப்படி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments