Breaking News

டாப்சிலிப்-கோழிகமுத்தியில் 15ம் தேதி யானைப்பொங்கல் விழா

டாப்சிலிப்-கோழிகமுத்தியில் 15ம் தேதி யானைப்பொங்கல் விழா




வரும் 15ம் தேதி டாப்சிலிப் கோழிகமுத்தியில் யானைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் அமைந்துள்ளது உலாந்தி வனச்சரகம். உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் யானைகளை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யானைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கோழிகமுத்தியில் இருந்து யானைகள் டாப்சிலிப் கொண்டுவரப்பட்டு யானைப்பொங்கல் விழா நடத்தப்படும். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாகவும், டாப்சிலிப்பில் அதிக மழைப்பொழிவின் காரணமாகவும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமிலேயே யானைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் அனுமதி இருந்தாலும், டாப்சிலிப் வரை மட்டுமே சுற்றுலாப்பயணிகள் வாகனம் அனுமதிக்கப்படும். 


டாப்சிலிப்பில் இருந்து கோழிகமுத்து யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சுற்றுலாப்பயணிகள் வனத்துறை வாகனம் மூலம் கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், யானைகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதியும் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


பொங்கல் விழாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் யானைகள் அருகில் செல்லவோ, உணவு வழங்கவோ அனுமதி கிடையாது.

No comments