Breaking News

ஏர்க்கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

பொள்ளாச்சி, டிச.2 மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் சக்திவேல் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏர்க்கலப்பையை கையில் ஏந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏர் கலப்பயை கையில் ஏந்தி ஊர்வலமும் நடைபெற்றது. ----

No comments