கபடி போட்டியில் பி.ஏ சர்வதேசப் பள்ளி சாம்பியன்
கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான கோவை சகோதயா சார்பில் கபடி போட்டி நடத்தப்பட்டது.
இதில் பல பள்ளிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் *19 வயதிற்கு* உட்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டி பிரிவில்
*பி.ஏ சர்வதேசப் பள்ளி வென்றது.* அந்த அணி இறுதிப் போட்டியில் கோவை பப்ளிக் பள்ளியை *42-32* என்ற விகிதத்தில் வீழ்த்தி *முதல் பரிசை வென்றது* .
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பி.ஏ.சர்வதேச பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
பள்ளியின் தலைவர் அப்புக்குட்டி, முதல்வர் மகேஷ் கே.நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளைப் பாராட்டினர்.
No comments