டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 22 ஆவது பட்டமளிப்பு விழா
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 22 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றனர்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் ம. மாணிக்கம் தலைமை வகித்தார்.
தாளாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். சென்னை இன்பைனைட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சோபா சுரேஷ் நித்தின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 716 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்த 11 மாணவர்களுக்கு தங்கம், 12 மாணவர்களுக்கு வெள்ளி, 14 மாணவர்களுக்கு வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி செயலர் சுப்பிரமணியம் டீன்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார் நன்றி கூறினர்.
No comments