Breaking News

நிழல் குடையை திறந்து வைத்த எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்



மேட்டுப்பாளையம் கிராமத்தில் புதிய நிழல்குடையை எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் கிராமத்தில்  புதிய பயணியர் நிழற்குடை அமைக்க  பொதுமக்கள் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிழல்குடை திறப்பு விழா நடைபெற்றது. எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் நிழல் குடையை திறந்து வைத்தார்.   
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம்,
ஒன்றியக் குழு தலைவர் நாகராணி, துணைத்தலைவர் துரை, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் டி.எல்.சிங்,  ,னஒன்றிய அம்மா பேரவை செயலாளர் விநாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.


No comments