Breaking News

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129 வது பிறந்தநாள் விழா.

பொள்ளாச்சி :
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் நேதாஜி அவர்களின் 129  வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்குதல் அன்னதான நிகழ்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் சேலை வேஷ்டி வழங்கும் விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். சஞ்சனா ஸ்வஸ்திக் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையை சேர்ந்த கீர்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஆர். ராமகிருஷ்ண சாமி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து..
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் வேட்டி சேலை மற்றும் பார்வையற்றோர்களுக்கு பயன்படுத்தும் ஊன்றுகோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஎம் கல்லூரி முதல்வர் மாணிக்க செழியன் மேலாளர் ரகுநாதன்.என்சிசி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சித்திரைச் செல்வன். பொள்ளாச்சி நகராட்சி அரசு நியமன உறுப்பினர் கவிஞர். முருகானந்தம்பொள்ளாச்சி நல் விடியல் அறக்கட்டளை தலைவர் முத்து பாய் (எ) காஜாமைதீன் லைன்ஸ் கிளப் சேர்ந்த கனகராஜன்.பசுமை குரல் அமைப்பைச் சேர்ந்த மகேந்திரன்.காங்கிரஸ் நிர்வாகி வி எஸ் ஆர் கே மோகன் வெண்ணிலா ரவிக்குமார்.நேதாஜி வழி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பத்திரிக்கையாளர் ஜீவா.தர்மராஜ் நவீன்.
உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.

No comments