Breaking News

நெகமம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி


நெகமம் அடுத்த கானியாலாம்பாளையம் பகுதியில் தனியார் உணவு உற்பத்தி நிறுவனத்தில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தொழிலாளர்கள் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரியாஸசன்சேக்(28) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சன்னர்மஜித்(40) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments