Breaking News

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. எம்எல்ஏ பொள்ளச்சி வி.ஜெயராமன் கருத்து


சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது

எம்எல்ஏ பொள்ளச்சி வி.ஜெயராமன் கருத்து

பொள்ளாச்சி, ஜன.25-
வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
 பொள்ளாச்சி 33வது வார்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். அதிமுக நிர்வாகி நவாஷ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்றார். 
பொள்ளாச்சி வி.ஜெயராமன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது...பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் ஏமாற்றிய திமுகவின் முதலமைச்சர் சட்டப்பேரவையில் மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம் என கூறினார். வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. லஞ்சம், ஊழல் நிறைந்த திமுக ஆட்சியில் மக்கள் ஏமாற்றுபட்டுள்ளார்கள். குடும்ப ஆட்சி எப்போது வீட்டுக்குபோகும் என தவமாய் பொதுமக்கள் தவம் இருக்கின்றனர். கஜானவை காலி செய்துவிட்டு தப்பிவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் நடக்காது. அதிமுக கூட்டணி மேலும் வலுவடையும். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் எம்ஜிஆர், ஜெயலலிதா விரைவில் அமையும் என்றார்.
 அதிமுக நிர்வாகிகள் அண்ணாதுரை, காளிமுத்து, ஜேம்ஸ்ராஜா, நீலகண்டன், அருணாச்சலம்,அக்னீஸ்முகுந்தன், எஸ்.பி.வசந்த், செந்தில், மார்ட்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments