குடிநீர் சம்ப் அமைக்க பூமி பூஜை இரண்டு எம்எல்ஏக்கள் துவக்கி வைப்பு
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட டி. நல்லி கவுண்டன்பாளையம் பகுதியில் தாளக்கரை ஊராட்சியில் 15 வது மாநில நிதி குழு சார்பில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சம்ப் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன் ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். உடன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், ஒன்றிய குழு தலைவர் விஜயராணி, ஒன்றியக் குழு துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் காளீஸ்வரி, சண்முகம், காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். அதற்கு முன்பாக சி.கோபாலபுரம் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் துவக்க விழா நடைபெற்றது. எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் சக்திவேல் அதிமுக நிர்வாகிகள் பிரபு ராம், காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்
No comments