Breaking News

மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு விருது


கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் எப்போ வருவாரோ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 8 நாட்கள் நடைபெற்று வருகிறது.  2025 ஆம் ஆண்டின் முதல் நாள் விழா கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் மாலை நடைபெற்றது.  அதில் பல்லாண்டுகளாக ஆன்மீக தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கு அருள் வளர் செம்மல் விருது  வழங்கப்பட்டது.  மாசாணியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு உள்ளிட்ட பல்வேறு பொள்ளாச்சி சுற்றுவட்டார கோயில்களின் திருப்பணிகள் செய்து வரும் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணனின் ஆன்மீகப் பணியைப் பாராட்டும் வண்ணம் அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயிலைச் சார்ந்த கார்த்திகேயன், சேக்கிழார் புனித பேரவையைச் சார்ந்த மூர்த்தி, சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜ சுவாமி திருக்கோயிலை சார்ந்த நாகராஜன், குருக்கள்பட்டி கடைமடை அய்யனார் கருப்பசாமி கோயிலை சார்ந்த முருகேசன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமானுஜர் குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார்.  பி. கே. கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணன், விஜயா வேலாயுதம், மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுடன் பெருந்திரளாக பொதுமக்களும் கண்டு களித்தனர்.

No comments