Breaking News

பொள்ளாச்சியில் சிலம்பப் போட்டி

பொள்ளாச்சியில் சிலம்ப போட்டி

பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  பொள்ளாச்சி சிவா தற்காப்பு கலைக்கூடம் சிலம்ப போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. பயிற்சியாளர்க சிவானந்தம், சூர்யநாராயணன், மணிகண்டன், செல்வக்குமார், சாமிநாதன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பல்வேறு வயதினருக்கான பிரிவுகளில் 150 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் பரிசளிப்பு விழாவில் நன்றி கூறினார்.

No comments