Breaking News

மருத்துவர் வீட்டில் 136 பவுன் நகை திருட்டு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அடுத்த ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40), இவர் பொள்ளாச்சியில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். பொங்கல் விடுமுறை என்பதால் கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று பக்கத்து வீட்டில் இருந்தவர் வீடு திறந்து இருப்பதை பார்த்து மருத்துவக் கார்த்திக்கிற்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, மருத்துவர் கார்த்திக் கேரளாவில் இருந்து வந்த பிறகு போலீசார் உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டில் வைத்திருந்த 136 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments