Breaking News

ராமு கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா

ராமு கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா 
பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. 
ராமு கலை அறிவியல் கல்லூரியில் சிறந்த கல்வி வழங்கி வருவதுடன் விளையாட்டு, பாரம்பரிய நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கல்லூரியில் நடைபெற்றது. மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். முளைப்பாரி எடுத்தல், மாட்டு வண்டியில் வந்து பொங்கல் வைத்தல் மற்றும் பாரம்பரிய முறைப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 கல்லூரி செயலாளர் நித்தியானந்தன் தலைமை வகித்தார். முதல்வர் பிரேமலதா முன்னிலை வகித்தார். தலைமை செயல் அதிகாரி ஹரி முரளி உட்பட பேராசிரியர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

No comments