சப் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார பிரச்சனை தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சியினர் பாலியல் பிரச்சனைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை 100 எண்ணிற்கு இன்று ஃபோன் செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments