Breaking News

பிப்ரவரி 14ல் மாசாணியம்மன் குண்டம் விழா




ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவுள்ளது.
 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் துவங்கும். இந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி குண்டம் விழாவிற்காக கொடியேற்றம் நடைபெறவுள்ளது.  பிப்ரவரி 11ம் தேதி மயான பூஜையும், பிப்ரவரி 12ம் தேதி சக்திகும்பஸ்தாபனமும்,  மகாபூஜையும்,  பிப்ரவரி 13ம் தேதி  குண்டம் கட்டுதலும், சித்திரதேர் வடம் பிடித்தலும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெறவுள்ளது. குண்டம் விழாவிற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து ஆகியோர் செய்துவருகின்றனர்.

---

No comments