டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ராமசாமி, இணை செயலாளர் சுப்பிரமணியம், முதல்வர் கோவிந்தசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் ஆகியோர் பொங்கல் நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் பங்கேற்றனர். மாணவிகள் பொங்கல் வைத்தனர். மாட்டு வண்டிகள், சண்டை கிடாய்கள் போன்றவைகளுக்கு கல்லூரி வளாகத்தில் மரியாதை செய்யப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
No comments