செல்லப்பிராணிக்கு உதவி செய்த இயற்கை நேசி அறக்கட்டளை
பொள்ளாச்சி அடுத்த வெள்ளாள பாளையம் கிராமத்தில் செல்ல பிராணியை(நாய்) கட்டி வைத்ததன் காரணமாக கழுத்தை சுற்றியும் காயம் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளானது. ஆனால், செல்ல பிராணியை வளர்த்த உரிமையாளர் அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அப்படியே கட்டி வைத்திருந்தார்.
அதன் காரணமாக செல்லப்பிராணியின் கழுத்துப் பகுதி முழுவதும் காயம் ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதோடு கழுத்தில் இருந்து புழுக்களும் வெளிவரத் தொடங்கியது.
இதையடுத்து, பொள்ளாச்சி அன்சாரி வீதியில் உள்ள திரு.ராதாகிருஷ்ணன் ( நோட்டரி வழக்கறிஞர் ) அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தார். சிறிதும் தாமதிக்காமல் தகவல் கிடைத்த 30 நிமிடத்தில் வெள்ளாளபாளையம் சென்று செல்லப்பிராணியை நேரில் பார்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவ சிகிச்சை அளிக்க தவறினால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிறகு செல்லப்பிராணியை மருத்துவமனை அழைத்துச் செல்ல உரிமையாளர் சம்மதம் தெரிவித்தார். இந்த செல்லப் பிராணி முழுமையாக குணமாகும் வரை தினமும் எங்கள் அறக்கட்டளையைச் சார்ந்த உறுப்பினர்கள் செல்ல பிராணியை பார்வையிட செல்வார்கள் என இயற்கை நேசி அறக்கட்டளையின் நிறுவன வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
No comments