Breaking News

எஸ் பி வேலுமணி உட்பட 900 பேர் கைது







அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ் பி வேலுமணி உட்பட மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை  கண்டித்து  உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
எம்எல்ஏக்கள் எஸ் பி வேலுமணி,
 செ.தாமோதரன், சூலூர் கந்தசாமி உட்பட 9க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தியும், காவல்துறை மெத்தனமாக செயல்பட்டதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் எஸ்.பி. வேலுமணி செ.தாமோதரன், சூலூர் கந்தசாமி உட்பட 900 பேரை போலீசார் கைது செய்தனர். 

No comments