அங்கலக்குறிச்சியில் மரம் வெட்டியதாக புகார்
அங்கலக்குறிச்சியில் சாலையோரத்தில் மரம் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் வழியில் வள்ளியம்மாள் திரையரங்கம் அருகே சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மரம் வெட்டுவதை பார்த்து பொதுமக்கள் கேள்வி கேட்டதை அடுத்து மரம் வெட்டியவர்கள் அங்கேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மரம் வெட்டியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments