Breaking News

மார்கழி மாத உற்சவ விழா

பொள்ளாச்சி சங்கீத சபா நடத்தும் மார்கழி மகா உற்சவத்தின் ஐந்தாம் ஆண்டு இசை விழா ஆர்ஷ வித்யா பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த இசைக்கலைஞர்களை கௌரவப்படுத்தினார். வாய்ப்பாட்டுக் கலைஞர் காளியாபுரம் அழுக்குத்துரை, மிருதங்க கலைஞர் கோட்டம்பட்டி மயில்சாமி, பொன்னாபுரம் தர்மராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். பொள்ளாச்சி சங்கீத சபா தலைவர் முத்துசாமி, பொருளாளர் ராஜா அரங்கநாதன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.  ஆர்ஷ பீடத்தின் தலைவர் தவத்திரு ததேவானந்த சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சோமந்துறைச் சித்தூர் முனைவர் கோடீஸ்வரி சுகுமார்,  ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட பலரின் இசை நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் நடைபெற்றன. பொள்ளாச்சி சங்கீத சபா செயலர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.

No comments