வால்பாறையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய வாலிபர் கைது
வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (51). வால்பாறையில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிகிறார். 2 நாட்களுக்கு முன்பு மாலை, வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்திலிருந்து சேக்கல்முடி செல்லக்கூடிய அரசு பேருந்தில் அவர் பணியில் இருந்தார். அப்போது வால்பாறை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பழைய வால்பாறை பேருந்து நிறுத்தம் முன்பு பேருந்து பழுதாகி நின்றதாகத் தெரிகிறது. அப்போது முருகாளி
எஸ்டேட்டை சேர்ந்த கார்த்திக் (24), என்பவர் பேருந்து விட்டு இறங்கி நடுரோட்டில் பேருந்தை போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடத்துனர் எதற்காக போட்டோ எடுத்தார் என்று கேட்டபோது பேஸ்புக் இல் போட என்று சொன்னதாகவும் ஓரமாக நிற்க சொன்னதற்கு தகாத வார்த்தையில் பேசி கையில் இருந்த ஏதோ பொருளைக் கொண்டு நடத்துனர் பெரியசாமி மீது தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்கியவுடன் காயம் அடைந்த நடத்துனரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். இது குறித்து நடத்துனர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர்.
No comments