ஆழியாரில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க எதிர்ப்பு!
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் கடவுச்சீட்டு (passport) விண்ணப்பிக்க கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக பொள்ளாச்சியில் கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்க கோரிக்கை எழுந்து வந்த நிலையில், மத்திய அரசு, நாடு முழுவதும் 600 POSK திறக்க ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு பதிலாக ஆழியார் துணை தபால் நிலையத்தில் இந்த சேவை மையம் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. போதுமான இடவசதி, அதிவேக இணையதள வசதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் எளிதில் அணுகக் கூடிய போக்குவரத்து வசதி; பொள்ளாச்சி கிணத்துக்கடவு ஆனைமலை மற்றும் உடுமலை பகுதி மக்கள் எளிதில் பயன்பெறக்கூடிய வகையில் உள்ள பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை தவிர்த்து மேற்கண்ட எந்த போதுமான கட்டமைப்பு வசதிகளும் இல்லாத, பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத ஆழியாரில் இந்த சேவை மையம் அமைக்கப்படுவது மக்களுக்கு பயன்படாத நிலையில் உள்ளது. இதனை வலியுறுத்தி மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் பொள்ளாச்சி தலைமை அஞ்சல சூப்பர் இன்டெண்ட் அவர்களுக்கு பாஜக சார்பில், பாஜக விவசாயி அணி மாநில திட்ட பொறுப்பாளர் மற்றும் சிறப்பு அழைப்பாளர் விஜயகுமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
No comments