வால்பாறையில் அரசு பேருந்து நடத்துனுர் மீது பயணி தாக்குதல்
வால்பாறை -மானாம்பள்ளி அரசு பேருந்து வியாழக்கிழமை இரவு பழைய வால்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து பழுதாகி நின்றதாக தெரிகிறது. பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மாற்று பேருந்து வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேருந்தில் வந்த பயணி ஒருவர் நடத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நடத்துனரை மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். நடத்துனர் பெரிய சாமியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments