Breaking News

பெண் தொழில் முனைவோர் சந்திப்பு



பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண் தொழில்முனைவோர் சந்திப்பை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.
 பொள்ளாச்சி தொழில் வர்த்தகசபை சார்பில் நடைபெற்றுவரும் பொள்ளாச்சி திருவிழாவின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பெண் தொழில்முனைவோர் சந்திப்பு தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. மனிதவள வேளாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்சியை துவக்கி வைத்தார். உடன் பொள்ளாச்சி திருவிழா ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் எம்கேஜி ஆனந்தகுமார், தொழில்வர்த்தக சபைத்தலைவர் வெங்கடேஷ், சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments