கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
பொள்ளாச்சி திருவிழாவை முன்னிட்டு சர்க்கஸ் மைதானத்தில் புதன்கிழமை கண்காட்சி மற்றும் வள்ளிகும்மி ஆட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி 29ம் தேதி நடைபெறுகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. புதன்கிழமை மாரத்தான் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது. குழந்தை சமையல் பயற்சி , திருநங்கைகளுக்கான சமத்துவ திருவிழா, கிரிக்கெட் போட்டிகள் போன்றவை நடைபெற்றது. பொள்ளாச்சி சர்க்கஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் இருந்தார். தொடர்ந்து வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டத்தையும் துவக்கி வைத்தார். உடன் நகராட்சித்தலைவர் சியாமளாநவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி திருவிழா ஒருங்கிணைப்பாளர் எம்கேஜி ஆனந்தகுமார், தொழில்வர்த்தக சபைத்தலைவர் வெங்கடேஷ் உட்பட பலர் இருந்தனர்.
கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
Reviewed by Cheran Express
on
December 25, 2024
Rating: 5
No comments