Breaking News

வடுகபாளையம் மேம்பாலத்தை சீரமைக்க கோரி மறியல்

பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் வடுகு பாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவு அருகே ரயில்வே வழித்தடம் குறுக்கிடுவதால் ரயில்கள் வரும் நேரத்திற்கு ரயில்வே கேட் மூடப்பட்டு வந்தது. இதனால், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அந்த நேரத்தில் காலதாமதம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர்.
 இதை அடுத்து, ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், பாலத்தில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், பாலத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்படாமல் மாத கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பலர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இருந்த போதும் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்தனர். இதனால் வெள்ளிக்கிழமை அன்று மின்னல் மஹால் முன்பு சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

No comments