கலாம் உலக சாதனை நிகழ்ச்சி பொள்ளாச்சி மின்னல் மஹாலில் சனிக்கிழமை துவக்கம்
கலாம் உலக சாதனை நிகழ்ச்சி சனிக்கிழமை காலை மின்னல் மஹாலில் துவங்குகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
பரதம், குச்சிப்புடி, பழங்குடியினர் நடனம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், வள்ளி கும்மி போன்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறுகிறது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக மின்னல் சீனிவாசன், மகேஷ், கமலக்கண்ணன், மணிகண்டன், வேங்கை வெற்றி, மகேந்திரன், தினேஷ் உட்பட பலர் செய்துள்ளனர்.
No comments