Breaking News

பில் சின்னாம்பாளையம் பெருமாள் கோவிலில் 16ஆம் தேதி சிறப்பு பூஜை

பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் பில் சின்னாம் பாளையம் பகுதியில் ஸ்ரீ மகாலட்சுமி சமேத வைகுண்ட வாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் வைத்தால் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பூஜையில் பங்கேற்று வேண்டுதல் வைத்தால் ஓராண்டு காலத்திற்குள் நிறைவேறும் என நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments