Breaking News

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி சார் -ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சார் -ஆட்சியர் கேத்தரின்சரண்யா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்கு தலைவர் செந்தில் மற்றும் விவசாயிகள் பல பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். பாலாற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை தொண்டாமுத்தூர் அருகில் உள்ள குளத்தில் தில் தண்ணீரை எடுத்துச் சென்று நிரப்ப வேண்டும், தென்னை நார் தொழிற்சாலைகளால் பல்வேறு இடங்களில் தண்ணீர் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவர் மூர்த்தி என்பவர் ஆழியாறு மட்டும் கோட்டூர் பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளால் தண்ணீர் மாசு ஏற்பட்டுள்ளதாக கோரி மாசு கலந்த தண்ணீரை வாட்டர் பாட்டில்களில் கொண்டு வந்து சார ஆட்சியரிடம் நேரில் கொடுத்து குறைகளை தெரிவித்தார். தெரு நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு உயர் அதிகாரிகள் எப்போதுமே வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

No comments