தீபாவளியன்று அரசு பள்ளியில் அசைவ விருந்து 
சேத்துமடை அண்ணாநகர் அரசு பள்ளியில் தீபாவளி அன்று மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பாக அசைவ விருந்து படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 83 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாசிலாமணி என்பவர் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அனைத்து மாணவர்களும் சமமான அசைவ உணவு கிடைக்கும் வகையில் அசைவ விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூற்றுக்கும் அதிகமானோர் உணவு அருந்தினர். இதுகுறித்து ஆசிரியர் மாசிலாமணி கூறும் போது பெரும்பாலும் இந்தப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை மாணவர்கள் என்பதால் அனைவருக்கும் தீபாவளி அனறு கறி விருந்து கடந்த 10 ஆண்டுகளாக பரிமாறப்பட்டு வருகிறது என்றார்.
No comments