Breaking News

டேக்வாண்டோ போட்டியில் எஸ்டிசி கல்லூரி சாதனை


பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாணவர்கள் பிரிவு டேக்வாண்டோ போட்டிகள் கோவை கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற பொள்ளாச்சி எஸ்டிசி கல்லூரி மாணவர் சாய் பாலாஜி 80 கிலோ எடை பிரிவில் முதலிடமும், அய்யனார் 68 கிலோ எடை பிரிவில் முதலிடமும், தீபக் 54 கிலோ எடை பிரிவில் முதலிடமும், ஹரிஷ் 63 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடமும், பிரசன்னா 58 கிலோ எடை பிரிவில் மூன்றாமிடமும், அருட்செல்வன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மேலும் அணிப்பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடமும் பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி தலைவர் சேதுபதி, துணை தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜய மோகன், முதல்வர் வனிதாமணி, துணை முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பாரதி ஆகியோர் வாழ்த்தினர்.

No comments