மாசாணி அம்மன் கோயிலில் பாலாலயம்
மாசாணி அம்மன் கோயிலில் பாலாலயம்
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த அரசு உத்தரவிட்டது. இதை அடுத்து வரும் டிசம்பர் 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மூலஸ்தானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான பாலாலயம் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்க குமார், திமுக நிர்வாகி யுவராஜ், அதிமுக நிர்வாகிகள் கார்த்திக் அப்புசாமி, சுந்தரம், ராஜேந்திரன், விமல், செந்தில்குமார், கோயில் முறைதார் மனோகரன் மற்றும் கோயில் ஊழியர்கள் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
No comments