Home
/
Unlabelled
/
நியாய விலைக்கடை முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் போராட்டம். எம்எல்ஏ பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு
நியாய விலைக்கடை முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் போராட்டம். எம்எல்ஏ பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு
நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யவேண்டும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக இராமநாதபுரம் நியாயவிலைக்கடை முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றார். தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், நீரா உற்பத்தியாளர் பத்மநாபன் உட்பட பலர் கட்சி சார்பற்ற விவசாய சங்க நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தேங்காய் விவசாயிகளுக்கு கட்டுபடியாக விலை கிடைக்காமல் இருப்பதால் தென்னை விவசாயிகள் பாதிப்பு அடைந்துவருகின்றனர். தேங்காய் விலை சரிவை தடுக்கவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்நிலையில், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து 100 நாட்களுக்கு 100 நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் நியாய விலைக்கடை முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
நியாய விலைக்கடை முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் போராட்டம். எம்எல்ஏ பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு
Reviewed by Cheran Express
on
November 12, 2024
Rating: 5
No comments