கஞ்சா வைத்திருந்த பி டெக் பட்டதாரி உட்பட இருவர் கைது
வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி, போலீசார் கார்த்திக், மணிகண்டன், வேல் சேவியர் ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரித்திஷ் என்பவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தற்போது பழைய வால்பாறையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வால்பாறையில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருவதும், கோவையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து, கோவை சென்ற வால்பாறை போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ராஜேஷ்குமார் பி டெக் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments