Breaking News

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இளைஞர் நலசங்கம் சார்பில் தேர்நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவபடத்திற்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், பொள்ளாச்சி நகரக்கழக செயலாளர்  கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் அருணாச்சலம், இரும்புகுரு, நகரக் கழக பொருளாளர் கனகு, ஒன்றிய குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் காளிமுத்து,மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் முரட்டுக்காளை முரளி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் மார்ட்டின், கிட்டு,  இக்பால், நகர அமைப்பு ஓட்டுனர் அணி செயலாளர் ரவி, நகர பாசறை செயலாளர் சத்யவர்த்தி, நகர மகளிரணி செயலாளர் சபியா,  நாகராஜ், ஒன்றிய மாணவரணி துணைத் தலைவர் சிவராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments