கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 97வது வட்டக் கழகத்திற்குட்பட்ட பழனியப்பா லே அவுட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டித்தர வேண்டி எம்எல்ஏ செ.தாமோதரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்துசட்டமன்ற உறுப்பினர் நிதி ரூபாய் 15 இலட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ செ.தாமோதரன் திறந்து வைத்து பொருட்களை வழங்கினார். உடன் குறிச்சி பகுதி கழக செயலாளர் பெருமாள்சாமி, 94 வது வட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணன், 94A வட்ட கழக செயலாளர் மாணிக்கவாசகம், 96 வது வட்ட கழக செயலாளர் செந்தில்குமார், 96A வது வட்ட கழக செயலாளர் உதயகுமார், 97 வது வட்ட கழக செயலாளர் கேபிள் பாபு, 97A வட்ட கழக செயலாளர் RTO_பிரகாஷ், 98 வது வட்ட கழக செயலாளர் நிஜாம் மற்றும் 98A வது வட்ட கழக செயலாளர் குமாரசாமி அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நியாய விலைக் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ செ.தாமோதரன்
Reviewed by Cheran Express
on
October 09, 2024
Rating: 5
No comments