பொள்ளாச்சி மற்றும் நெகமத்தில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்
 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இருப்பதாக கூறி அதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில்  நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் துவக்கி வைத்தார்.  மாவட்ட அவை தலைவர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி, உயர்வு,விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
 பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி  ஜெயராமன் அளித்த பேட்டியின் போது.... தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவிர எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. புதிய மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம், குடிநீர் திட்டங்கள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும்  நடைபெறவில்லை. அதிமுகவில் செயல்படுத்தப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கும் திட்டம்,  ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் முன்னேறி வந்த  அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு வரியில்லை, இறப்பவர்களுக்கு வரியில்லை இதைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஆர். ஏ. சக்திவேல், அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ் ராஜா, அருணாச்சலம், ரகுபதி, ராஜ்கபூர், விநாயகமூர்த்தி, மாட்டின், கனகு, முருகேஷ், அக்னிஸ் முகுந்தன், ஈஸ்வரமூர்த்தி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். 
இதே போல் பெரிய நெகமம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாப்பு, நிர்வாகி தண்டபாணி முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ராதா மணி, ஒன்றிய குழு தலைவர் நாகராணி, ஒன்றிய குழு துணை தலைவர் எம் எம் ஆர் துரை, அதிமுக நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.
 
No comments